காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதனைகள் தொண்டைக்குழி வரையிலும் இன்பங்கள் முகம் முழுவதும் இருந்த காலம்

நிகழ்வு : NITTFEST - 2007
பெற்று தந்தது : முதல் பரிசு

தலைப்பு : முள் இழந்த கடிகாரம்

" ஆண்டுகள் இருநூறு
அடிமைகளாய்........
சுற்றியிருந்த சுழற்சியில்
முளைத்திருந்தன முட்கள்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்....!
ஒன்று சேர்த்து
ஒற்றுமையாய் ஓட
விரட்டினோம்
அந்நியர்களை......!

உலகுக்கும் காட்டினோம்
மக்களாட்சி
மகத்துவத்தையும்,
உன்ன்னதமானவர்களையும்.....!

ஊளையிட்டவர்களும்,உச்சு
கொட்டியவர்களும்
உற்று நோக்கிகொண்டிருந்தனர்

நிமிடங்கள் நீந்திக்
கொண்டிருந்தன
முட்களின் உதவியோடு....!

கரைந்து கொண்டிருந்த
காலச்சுவட்டில் உருவாகிக்
கொண்டிருந்தன விக்ஷசெடிகள்
முட்களோடு.......
எல்லா இடங்களிலும்
நீக்கமற........

உரமிட்டும் உணவிட்டும்
வளர்த்துக்
கொண்டுருந்தனர்.....

வளர்ந்துவிட்ட விக்ஷசெடிகளின்
இன்றைய
நிலை தான் என்ன...........?

தாய்ப்பாலையும்,
தமிழ்ப்பாலையும்
தண்ணீர் ஆக்குகிறார்கள்
நாகரீகம் என்று சொல்லி.....!

தாகத்திற்கு
தண்ணீரில்லாமலிருக்கா
குளிக்கிறார்கள்
குடிநீரில்........!

தாகம் தணித்து
தங்குமிடம் தேடினால்
கிடைப்பதென்னவோ
தண்டவாளங்களும்
புல்தரைகள் மட்டுமே.........!

பட்டம் வாங்குகிறா(ன்)ர்கள்
பணம் படைத்தவ(ன்)ர்கள்
இல்லாதவ(ன்)ர்கள்
பட்டம் விடுகிறா(ன்)ர்கள்

தெய்வம் என்று
பெண்ணை
புகழ்வதோடு,
விலையும் பேசுகிறா(ன்)ர்கள்

வியர்வக்கு விலை
கொடுத்தவர்களோடு
மன்றாடிப்ப் பார்த்த
மனசாட்சியும்
மண்ணூக்குள்
மறைய துவங்கியது...!

கந்துவட்டியும்,மருந்து
கடனும் மலைகளாகி
மரண வாசலில்
தள்ளப் படுகிறார்கள்..

சுதந்திரம் எனும்
போர்வையில்
அடிமையாக்குகிறார்கள்...
ரத்தத்தை சுண்டி
இழுக்கும்
அட்டையாய்
அரியணைகளை
அல(சி)ங்கப்படுத்துகிறார்கள்....!

பசுமை புரட்சி
என்று கூறி
பூக்களை
புழுதியில் புதைக்கின்றனர்...!

நேர்மையும் நியாமும்
சொற்களில்
மட்டும் உருவாகி
காற்றோடு கலந்து
தெரியாமல் போனது
கண்களுக்கு..!

பிறப்பு முதல் இறப்பு
வரை நொடிகள்
ஒவ்வொன்றிலும்
விக்ஷமிகளின்
விளையாட்டால்
வீணடிக்கப்படுகின்றனர்
உண்மையாணவர்கள்...!

இத்தோடு நில்லாமல்
ஒய்யாரமாய்
ஓடிக்கொண்டிருந்த
முட்களை வளைத்தும்
இடித்தும் நொடித்தும்
தூக்கி எறியவும் செய்தனர்...!

முழுவதும் முட்களை
இழந்த நிலையில்
நொடிக்கு
ஒன்றென்று
அடையாளங்களை மட்டும்
பெற்று ஓசை இல்லாமல்
மெளனமாய் உள்ளது
முள் இழந்த கடிகாரம்.... ! "