சுனாமி



நீரின்றி அமையாது உலகு
ஆனால் அந்த நீரினாலே உலகம்
அமையாது போலெனத் தெரிகிறது

எளிமை


சபையில் பாடாத குயிலையும்
மேடையில் ஆடாத மயிலையும்
பந்தயத்தில் ஓடாத முயலையும்
பிரபலப்படுத்தியது அவைகளின்
எளிமையும் உழைப்பு மட்டுமே...!

காதல்





கண்களால் பார்வை வீசி
இதயத்தால் சொற்கள் பேசி
மௌனத்தால் விடை௯றும் தேவதையே...!

உன்சிரிப்பொலியால்
சிதைந்து போகிறேன்...

சிதைந்துபோன என் இதயத்துக்கு
இதம்தருவது அந்த
மூன்றெழுத்து வார்த்தை

நாகரீகமும் வறுமையும்



ஆடைகள் குறைந்தே
காணப்படும்
வறுமை....

குறைக்கப்பட்டு கொண்டே
வரப்படும்
நாகரீகம்...

நிமிடங்கள்.....? யுகங்களாய்...!
யுகங்களும்.... ? நிமிடங்கள்....!

தொலைக்காட்சி




எனை வீழ்த்தும் என்று
தெரிந்தும் உன்னை காண்கிறேன்
ஏனெனில் நிலையற்ற
இன்பத்திற்காக....

இதனால்
இடரப்போவது நிலையான
என் எதிர்காலம்

விதை(என்ற வார்த்தை கவிதையின் முடிவில்)



ஆறறிவோடு அவனையும்
ஒரறி முதல்
ஐந்தறிவோடு அவைகளையும்

ஒருங்கிணைத்து தரும்
ஒருவனை(ஒருத்தியை)
ஞனனம்
செய்ய தேடுகிறேன்
விதை(தி)யை

திரியை ஆண்பாலாக நினைத்து




ஒளிர்கிறேன்
உன் நினைவுகளால்

அவர்களின்
நினைவுகளில் மூழ்கியபடி

நானன்றியும்
அவர்கள் "அவர்கள்"....!

ஆனால் நீயின்றி
நா.......னா...........?

நீ முடிந்த(முடித்த)பின் நான்
"அவை"களாய்.....!

நான்முடிந்தபின் நீ
"அவர்"களாய்......!

கவிதை



உன்னை சுமப்பதை விட
பிரசவிப்பதில்தான் வேதனைகள்
அதிகம் உணர்கிறேன்.....!

இரவில் நட்சத்திரத்தை பார்த்தபோது



எனைப்பார்த்து கண் சிமிட்டும்
தேவதையே...!

இடரில்லா இரவில் மட்டும்
நமதுபயணம்....!

உன்னுள்
முழுமையாக நான்...

என்னுள்
சுவடு தெரியாமல் நீ...

உனைநெருங்க
எண்ணும்போது
இடைவெளி தேவையென்று
விலகி செல்கிறாய்.....!

நெருங்குவதும் விலகுவதுமாய்
……………………………நம் வாழ்க்கை.

அம்மா




உன் நிழலில்
ஓய்வெடுக்கும்
எனைப் பற்றி மட்டும்
நினைக்க உன்னால்
மட்டும் எப்படி
முடிகிறது......?