தருணம் : இதுவரை கடந்து வந்த நாட்களைப் பற்றி..


" நிசப்தமில்லா
இரவுகள்
நித்திரையின்றி..
எங்கே தொலைத்தேன் .?

நித்திரையையும்,
நிம்மதியையும்.....!

தொலைத்த இடம்
தெரியாவிட்டாலும்,
தேடல் தொட
ங்கியது..!

சந்தோஷமும் ,
நிம்மதியும் ,
புறவுலகில் என்றெ
ண்ணி....
நிற்காமல் ஓடி ,

இடம் ஒன்றை பிடித்தேன் .
வழியில் வந்த
சந்தோஷத்தை
யும்
வேதனையையும்
பொருட்ப
டுத்தாமல்...!

இங்கே கற்றுத்தரப்படுவது ,
இடம் ஒ
ன்றை பிடிக்கும்
வழியை
மட்டுமே....!

வழியின் நிகழ்வுகளை
பொறுப்பேற்று ,
சந்தோஷப்பட
வோ....
வலியை நெஞ்சில்
தாங்கவோ

கற்றுத்தரப் படுவம் இல்லை...
உரிமை
வழங்கப்படுவதும் இல்லை.....

இதனால்தான் ஏனோ
இடம் பிடித்த...
அனைவர் நெஞ்சிலும்
விஞ்சியிரு
ப்பது..
வெற்றிடமும்....
ஏமாற்றமுமே.......! "தருணம் : என்னோடு பணியாற்றும் சக நண்பரின் திருமண நாள் பற்றி ..

கவிதை நடை : கவிதையின் பாதி வரை நண்பர் தன் மனைவிக்கு எழுதியதாகவும் , மீதி பாதி நான் அவர்களுக்கு எழுதியதாகவும்.

குயில் கூவும் அதிகாலைப் பொழுது ,
பனித் துளிகள் புற்களோடு
காதல் வயப்பட்ட தருணங்கள்.

அம்மி மிதித்து ,
அருந்ததி பார்த்து ,
மாங்கல்யம் சூடி ,
மணவாழ்க்கை ஆரம்பமானது
நம் இருவருக்கும்.

பசுமையான நினைவுகள்
மனமெங்கும் ..
ஆனால் காலம் சில
வருடங்களை விழுங்கியிருந்தது
நமக்கு தெரியாமலே....!

கடலில் மூழ்கியவன்
முத்தெடுப்பான்..
உயிரெனும் முத்தெடுத்தோம்
மணவாழ்க்கையில் மூழ்கி.

மூங்கிலாய் நான் ,
காற்றாய் நீ ,
அதில் ஊற்றெடுக்கும் ராகங்களாய்
நம் குழந்தைகள்...

காலங்கள் பல கடந்தாலும்
நினைத்துப் பார்க்கும்
தருணங்கள் எல்லாம் ,
பெற்ற வலிகள்
பாடங்களாய் மாறி ,
சந்தோஷங்கள் தலைத்தோங்க
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
மனம் விட்டு பேச சில
நிமிடங்கள் மட்டுமே ....!

உணர்வு பரிமாற்றத்தில்
மட்டுமல்ல...
உறவுப் பரிமாற்றத்திலும்
உங்களுக்கு நிகர் நீங்களே என்று
உலகம் உங்களை
போற்றும் தருணங்களுக்காக
வாழ வேண்டுமென்று
வாழ்த்துவதோடு,

தவம் செய்வார்கள்
உங்களை பெற்றோராய்ப் பெற.....
தவம் செய்தீர்கள்
அவர்களை குழந்தைகளாய்ப் பெற..!

உணர்வொத்த தம்பதிகளாய்,
வாழையடி வாழையென
வசந்தங்கள்
தழைத்தோங்க, இறைவனை
வேண்டி வாழ்த்தி ,
வணங்குகிறேன்.
தருணம் : பெங்களூர் சாலைகளின் ஓரம் என் வயதொத்த குழிவெட்டும் நண்பர்களை கடக்கும் தருணங்கள்.

பசுமை நகரத்தின் தெற்குப்பகுதி
விபத்துகளின்றி விலகிச்செல்ல
அமைக்கப்பட்ட வெளிப்புற
வளைவுச்சாலைகள் (outter ring road)......

சாலையின் ஒரு ஓரத்தில்
என் வயதொத்த இளைஞர்கள்
கையில்
மம்மட்டியும் கடப்பாரையுமாக....!

கடந்து செல்லும் தருணங்கள்
ஒவ்வொன்றிலும்
கணத்துப் போகிறது மனம்...!

உலக நியதியில்
வாய்ப்பு கிடைத்த
அனைவரும்
யாரோ ஒருவரிடமிருந்து
தட்டிப் பறித்தவையே....!

தட்டிப் பறித்த வாய்ப்பை
எப்படி திருப்பித்
தரப் போகிறோம்....?

வயதொத்த காலத்தில்
வாய்ப்புகளை திருப்பித்தர
முடியாவிட்டாலும்.....
அவர்களின் சந்ததிகளுக்கு
ஒதுங்க நிழலும்
உறங்க சிறிது இடமும்
கிடைக்க உதவிடுவோம்
மனதார........!

மிருகங்களைப் போல நடத்தி
மிருகங்களாகவே மாறிவிட்டோம்...!

இது
மட்டுமா...?

நாகரீகம் தெரியாதவர்கள்....
அசுத்தமானவர்கள் என்று
அபத்தங்களை கூறுவதோடு
நாகரீகத்தையும்
நாடு கடத்துகிறோம்...

தலைமுறைகளை கடத்தாமால்
ஏற்றத்தாழ்வுகளை ஏறக்கட்டி
கிடைத்ததை பகிர்ந்து
வாழும் நம் பண்பாட்டை
கடைபிடிக்க
தயாராக உள்ளோமா.......?
கவிதை எழுதுவதற்கு களம் அமைத்து கொடுத்த கல்லூரி பருவத்தில் நான் கிறுக்கிய கிறுக்கள்கள் கவிதைகளாகவும் கதைகளாகவும் உங்கள் ரசனைக்கு இதோ............................
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதனைகள் தொண்டைக்குழி வரையிலும் இன்பங்கள் முகம் முழுவதும் இருந்த காலம்

நிகழ்வு : NITTFEST - 2007
பெற்று தந்தது : முதல் பரிசு

தலைப்பு :

கொடுக்கக்ப்பட்டுள்ள இடத்தை அடித்தளமாக வைத்து கவிதை வரைக.....

காஷ்மீர் பகுதி..............
லடாக் கரகோணம் மலைத்தொடர்களின் மத்தியில்
மிக அழகாய் ஒரு உலகம்.
புல்மேயும் மலைசெம்மறியாட்டின் வனப்பும்
குங்குமப்பூவின் செழிப்பும்
மெருகேறிக்கொண்டேயிருக்கும் வடிவும்
சில்லெனப்பாயும் இந்தஸ் நதியும்
சொல்லாமல் சொல்லிற்று இடம் லேக் என்று.

ஆனால் இன்று.....

லேக் ஏரியில் நீருக்குப் பதில் உறைந்த சிவப்பு
குழந்தைக்குப் தால் இசைக்குப் பதில் துப்பாக்கித் தாலாட்டு
நீர்வீழ்ச்சியின் ஓவென அழுகையோடு மக்களின் கண்ணீரும்

எல்லாம் தலைகீழாய்...........

ஆபத்து என்ன அழகைப் பெற்றதன் இலவச இணைப்போ..?

இறையாண்மையை இருப்பிடமாக
கொண்டு இந்தியாவின்
வடக்குப் பகுதியில்
நின்றிருந்த இமயமலையின்
பனிப் பொலிவைப் போல்
இங்கும் பனிப்பொலிவுகள்...!

விண்ணை முட்டும்
மலைத்தொடரில்
முட்டிப்பார்த்த
மரங்கள் பல..!
பச்சை பட்டாடையை
தன்மேல் அணிந்து
உள்ளத்தை உறுக்கிக்
கொண்டிருந்தாள்
பூமி தேவதை..!


நானும் சளைத்தவலில்லை
எனும் போட்டியோடு
மலைகளை குடைந்தும்
ஊடுறுவியும் சென்று
கொண்டிருந்தாள்
கடல் தேவதை...!

இயற்கை அளித்த
கொடையை
கண்களோடு
கைப்பற்றிக்கொள்ள
வந்து
குவிந்துகொண்டிருந்தார்கள்..

கைப்பற்ற நினைத்தவர்களின்
மனம் ஏமாந்துபோனதாலோ
என்னவோ
சொந்தமாக்க முயற்சித்தனர்...!

முயற்சியின் முதல்படியாய்
முடுக்கிவிடப்பட்டது
தீவிரவாதமும் வன்முறையும்
சுதந்திரம் எனும்
போர்வை கொண்டு..அழகை அடையநினைத்தவர்களின்
ஆட்டிப் படைத்தலால்
சிதறியும் சின்னாபின்னமாய்
ஆக்கப்பட்டனர்.....!

சிதறுண்டவர்களை சிறை
பிடித்தும் மீறுபவர்களை
துப்பாக்கியால்
துளைத்துக் கொண்டிருந்தனர்.
பச்சை பட்டாடை
உடுத்தியவள் இன்று
உதிரங்களை
உடையாக்கி கொண்டுள்ளள்...

முழுவதும் அடைய நினைத்து
நித்தம் இசைக்கப்படுகிறது
பீரங்கி முழக்கம்...

உறைந்த உதிரங்கள்
பெறுகி ஏரியையும்
தன்னோடு இணைத்துக்
கொண்டிருந்தது...!


விழிகள் மூடப்படுகிறது
தாலாட்டினால் அல்ல...
நித்தமும் முழங்கும்
துப்பாக்கிகளால்...!

விடிவை எட்டிப்பார்த்து
வியர்வையையும்
கண்ணீரோடு சேர்த்து
கலக்க விட்டுக்
கொண்டிருந்தனர்
நீர்வீழ்ச்சிகளில்.....!
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதனைகள் தொண்டைக்குழி வரையிலும் இன்பங்கள் முகம் முழுவதும் இருந்த காலம்

நிகழ்வு : NITTFEST - 2007
பெற்று தந்தது : முதல் பரிசு

தலைப்பு :

கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைப்பற்றிய உங்கள் கவிதை

குருதி வெள்ளம் ஆறாயோடும் கரையோரம்
மனித உயிர்கள் உடலைபிரியும் வலிபொறுக்காமல்
கதறும் ஓலம் எங்கும் எதிரொலித்தது

அந்த போர்களத்தில் அவனும் மற்றவர்களை
போல் உயிரை பணயம்வைத்து போராடி
பிற உயிர்களை பறித்துக் கொண்டிருநதான்

அவனிருப்பது இந்தியாவின் வடமூலை யென்றாலும்
அவன் மனம் மட்டும் தென்மூலையின்
ஓர்குடிசையில் பிரசவ வலிபொறாமல் துடிக்கும்
தன் மனைவியை நினைத்துக் கொண்டிருந்தது

திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வந்த
குண்டு அவன் இதயத்தை பதம்பார்த்தது.
மனத்திரையில் அவன்மனைவியின் முகம் மெல்லமங்கியது
சிறிது நேரத்தில் குடிசையிலிருந்து வெளியே
வந்த ஆயா, "ஆண் குழந்தை " என்றாள்

" பிறப்பு முதல் இறப்பு
வரை தாங்கி சுமக்கும்
தாய்திருநாட்டை தட்டிப்
பறிக்க வந்தவனின்
தலை எடுத்துக் கொண்டிருந்தனர்
தங்கள் தலையை அடகுவைத்து...!

உருண்டோடிய தலைகளில்
உதிர்க்கப்பட்ட உதிரங்கள்
வெள்ளமென பெருகி
ஓடிக்கொண்டிருந்தது..!

ஊடுருவலுக்கு உகந்ததாய்
அமைந்த வடமூலையில்
வாட்டி வதைத்துக்
கொண்டிருந்தார்கள்
உள்ளே நுழைந்தவர்களை..!

தாய்மண்ணிற்கு தன்னை
கொடுக்க முனைந்தாலும்
மாங்கல்யம் கொண்டு
மணமுடித்த தன்னவளை
எண்ணிப்பார்த்து
உலகைவிட்டு அனுப்பிக்
கொண்டிருந்தான் ஒருவன்......!

விரட்டிப் பிடித்து
உயிரை எடுத்து
தாய்மண்ணின் மானம்
காத்தாலும் நினைவுகள்
ஏனோ ஈருயிராய்
துடித்துக் கொண்டிருக்கும்
அவளையே தொடர்ந்தது...!

விலகிப்போன நினைவுகளில்
கொஞ்சம் விலகியும்
இருந்தான்...!

நெஞ்சை துளைக்கும்
குண்டொன்று
அவனுள் பாய்ந்தது
விலகியிருந்த நேரத்தில்...!

எண்ணங்களில் அவளின்
நினைவுகள் இருந்தும்
தன்நிலை தடுமாறி
சாய்ந்து கொண்டிருந்தான்..!

மெல்ல மெல்ல
நினைவுகள் நீங்கி
பிம்பங்கள் பின்னோக்கி
பயணித்தது..!

நினைவுகளில் இருந்தவள்
வலியோடு வழியொன்றை
கண்டாள்...!
வழிகளோடு வந்தவளை
உலகுக்கு கூறினாள்
மருத்துவதாய்
ஆண்மகனென்று...! "
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதனைகள் தொண்டைக்குழி வரையிலும் இன்பங்கள் முகம் முழுவதும் இருந்த காலம்

நிகழ்வு : NITTFEST - 2007
பெற்று தந்தது : முதல் பரிசு

தலைப்பு : முள் இழந்த கடிகாரம்

" ஆண்டுகள் இருநூறு
அடிமைகளாய்........
சுற்றியிருந்த சுழற்சியில்
முளைத்திருந்தன முட்கள்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்....!
ஒன்று சேர்த்து
ஒற்றுமையாய் ஓட
விரட்டினோம்
அந்நியர்களை......!

உலகுக்கும் காட்டினோம்
மக்களாட்சி
மகத்துவத்தையும்,
உன்ன்னதமானவர்களையும்.....!

ஊளையிட்டவர்களும்,உச்சு
கொட்டியவர்களும்
உற்று நோக்கிகொண்டிருந்தனர்

நிமிடங்கள் நீந்திக்
கொண்டிருந்தன
முட்களின் உதவியோடு....!

கரைந்து கொண்டிருந்த
காலச்சுவட்டில் உருவாகிக்
கொண்டிருந்தன விக்ஷசெடிகள்
முட்களோடு.......
எல்லா இடங்களிலும்
நீக்கமற........

உரமிட்டும் உணவிட்டும்
வளர்த்துக்
கொண்டுருந்தனர்.....

வளர்ந்துவிட்ட விக்ஷசெடிகளின்
இன்றைய
நிலை தான் என்ன...........?

தாய்ப்பாலையும்,
தமிழ்ப்பாலையும்
தண்ணீர் ஆக்குகிறார்கள்
நாகரீகம் என்று சொல்லி.....!

தாகத்திற்கு
தண்ணீரில்லாமலிருக்கா
குளிக்கிறார்கள்
குடிநீரில்........!

தாகம் தணித்து
தங்குமிடம் தேடினால்
கிடைப்பதென்னவோ
தண்டவாளங்களும்
புல்தரைகள் மட்டுமே.........!

பட்டம் வாங்குகிறா(ன்)ர்கள்
பணம் படைத்தவ(ன்)ர்கள்
இல்லாதவ(ன்)ர்கள்
பட்டம் விடுகிறா(ன்)ர்கள்

தெய்வம் என்று
பெண்ணை
புகழ்வதோடு,
விலையும் பேசுகிறா(ன்)ர்கள்

வியர்வக்கு விலை
கொடுத்தவர்களோடு
மன்றாடிப்ப் பார்த்த
மனசாட்சியும்
மண்ணூக்குள்
மறைய துவங்கியது...!

கந்துவட்டியும்,மருந்து
கடனும் மலைகளாகி
மரண வாசலில்
தள்ளப் படுகிறார்கள்..

சுதந்திரம் எனும்
போர்வையில்
அடிமையாக்குகிறார்கள்...
ரத்தத்தை சுண்டி
இழுக்கும்
அட்டையாய்
அரியணைகளை
அல(சி)ங்கப்படுத்துகிறார்கள்....!

பசுமை புரட்சி
என்று கூறி
பூக்களை
புழுதியில் புதைக்கின்றனர்...!

நேர்மையும் நியாமும்
சொற்களில்
மட்டும் உருவாகி
காற்றோடு கலந்து
தெரியாமல் போனது
கண்களுக்கு..!

பிறப்பு முதல் இறப்பு
வரை நொடிகள்
ஒவ்வொன்றிலும்
விக்ஷமிகளின்
விளையாட்டால்
வீணடிக்கப்படுகின்றனர்
உண்மையாணவர்கள்...!

இத்தோடு நில்லாமல்
ஒய்யாரமாய்
ஓடிக்கொண்டிருந்த
முட்களை வளைத்தும்
இடித்தும் நொடித்தும்
தூக்கி எறியவும் செய்தனர்...!

முழுவதும் முட்களை
இழந்த நிலையில்
நொடிக்கு
ஒன்றென்று
அடையாளங்களை மட்டும்
பெற்று ஓசை இல்லாமல்
மெளனமாய் உள்ளது
முள் இழந்த கடிகாரம்.... ! "