தருணம் : பெங்களூர் சாலைகளின் ஓரம் என் வயதொத்த குழிவெட்டும் நண்பர்களை கடக்கும் தருணங்கள்.

பசுமை நகரத்தின் தெற்குப்பகுதி
விபத்துகளின்றி விலகிச்செல்ல
அமைக்கப்பட்ட வெளிப்புற
வளைவுச்சாலைகள் (outter ring road)......

சாலையின் ஒரு ஓரத்தில்
என் வயதொத்த இளைஞர்கள்
கையில்
மம்மட்டியும் கடப்பாரையுமாக....!

கடந்து செல்லும் தருணங்கள்
ஒவ்வொன்றிலும்
கணத்துப் போகிறது மனம்...!

உலக நியதியில்
வாய்ப்பு கிடைத்த
அனைவரும்
யாரோ ஒருவரிடமிருந்து
தட்டிப் பறித்தவையே....!

தட்டிப் பறித்த வாய்ப்பை
எப்படி திருப்பித்
தரப் போகிறோம்....?

வயதொத்த காலத்தில்
வாய்ப்புகளை திருப்பித்தர
முடியாவிட்டாலும்.....
அவர்களின் சந்ததிகளுக்கு
ஒதுங்க நிழலும்
உறங்க சிறிது இடமும்
கிடைக்க உதவிடுவோம்
மனதார........!

மிருகங்களைப் போல நடத்தி
மிருகங்களாகவே மாறிவிட்டோம்...!

இது
மட்டுமா...?

நாகரீகம் தெரியாதவர்கள்....
அசுத்தமானவர்கள் என்று
அபத்தங்களை கூறுவதோடு
நாகரீகத்தையும்
நாடு கடத்துகிறோம்...

தலைமுறைகளை கடத்தாமால்
ஏற்றத்தாழ்வுகளை ஏறக்கட்டி
கிடைத்ததை பகிர்ந்து
வாழும் நம் பண்பாட்டை
கடைபிடிக்க
தயாராக உள்ளோமா.......?

4 comments:

Bee'morgan said...

welcome back after a long time.. :)

Good theme da..

But, it feels like something missing in the structure.. oru sila idangalil mattum.. matrabadi arumai... :)

தமிழ் said...

வருக நண்பரே
நீண்ட நாள்களுக்குப் பிறகு

வார்த்தைகள் ஒவ்வொன்றும்
வலியை
விளம்புகிறது

JAGANNATHAN CS said...

என்னை மீண்டும் மீண்டும் எழுத தோன்றுவது உங்களின் விமர்சனங்கள் மட்டுமே...
உங்கள் விமர்சனத்திற்கு எனம் சிரம் தாழ்ந்த நன்றிகள்(இருவருக்கும் திகிழ்மலர், மற்றும் Bee Morgan)..

JAGANNATHAN CS said...
This comment has been removed by the author.