தளத்திற்கு வருகை புரிந்த உங்களுக்கு நன்றி..
விமர்சனங்கள் அளித்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதனைகள் தொண்டைக்குழி வரையிலும் இன்பங்கள் முகம் முழுவதும் இருந்த காலம்
நிகழ்வு : NITTFEST - 2007பெற்று தந்தது : முதல் பரிசு
தலைப்பு : அருகிலிருக்கும் படத்திற்கான கவிதை
உதிரத்தை உயிராக்கி நிமிடங்களுக்கு வேதனைகளை கொடுத்து இன்பத்தை பெற காத்திருந்த நாட்கள் முன்னூறு (300).........!
அவள் உயிரைப் பறிக்கும் வலியோடு வந்து விழுந்தேன் மடியில்..........! என் மூச்சுக் காற்றின் வெப்பத்திலும் தழுவலிலும் எத்தனை முறை தன்னை மறந்திருப்பாள்........!
உயிராக்கிய உதிரத்தை உணவாக தந்தும் மகிழ்ந்தாள்........! உச்சி வகுடெடுத்து உலகிலேயே அழகென்று வியந்திருந்தாள்........!
உருண்டோடிப் போன உலக வாழ்க்கையில் உருமாறியும் வழி மாறியும் இருந்தேன்........!
வழிமாறிப் போன வாழ்க்கையில் நான் கண்ட இன்பங்கள் பெண்மையினால்............!
உணர்ச்சிகளின் உச்ச கட்டத்தில் எனக்கு இணங்க வைத்தேன் பணத்தினாலோ வற்புறுத்தலிலோ.........!
உயிர் கொடுத்தவள் அன்பாகவும் அதட்டியும் எத்தனை முறை கூறியிருப்பாள்...........!
உணர்ச்சிகளால் உண்மை விளங்கவும் இல்லை விளங்குவதற்கு முயற்சிக்கவும் இல்லை.......!
காமதேவனின் காலம் கடந்து காலதேவனின் கட்டுபாட்டில் இருந்த நாட்களில் உணர்ந்தேன்..........!
வற்புறுத்தலில் வார்த்தைகளை வீசியவர்களின் கனவு நனவானது..........!
உயிரை மெதுவாய் கொல்லும் நேய் என்னுள் குடி கொண்டிருந்தது..........!
இறைவா இப்போதாவது புரிகிறதா.. இல்லை இல்லை தெரிகிறதா.. உன் பகல் வே ஷம்.....
வே ஷம்கலைக்கும் தருணங்களை தருவிக்கவே கைது செய்கிறேன்..
ஏன் தெரியுமா.............?
குற்றம் செய்தவனைவிட தூண்டுபவனே முதல் குற்றவாளி அதனால் நீதான் முதல் குற்றவாளி....."
காலம் : தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் விளையாடிய காலம் நிகழ்வு : NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு தலைப்பு :் இவர்கள் தனிமையில் தங்களைத் தொலைத்தவர்கள்............ படுக்கை தலையணை போல இவர்களும் ஒரு பொருள்தான் பலர் பார்வயில். விளக்கேற்ற யாருமில்லை விளக்கணைக்கவே ஆர்வம் பலருக்கு ............ ஆசை அறவே இல்லை மோகம் மட்டுமே முப்பது நாட்களும். ஆடைகள் இவர்களுக்கு வெறும் அலங்காரப் பொருட்கள்தான்............. வாழ்க்கை கிடைக்காத இவர்களுக்கு உங்கள் வார்த்தைகளாவது கிடைக்கட்டும்.......................
"நாங்களும் கண்ணகிகள்தான் ஆனால் ராவணர்களை மட்டுமே தெரிந்தவர்கள் நாங்களும் தாரம் ஆகிறோம் தாழ்ப்ப்பாள் போடப்படும் போது.... ஆச்சரியம் தாழ்ப்ப்பாள் திறப்பதே இல்லை..........!
விட்டில் பூச்சிகளைப் போல் எப்போதாவது விடியும் பொழுதுகள்