நிகழ்வு : NITTFEST - 2006 பெற்று தந்தது : இரண்டாவது பரிசு
தலைப்பு : கடவுளைக் கைதுசெய்
" பழங்கள் மட்டுமா உதிர்க்கப்படுகின்றன

பிஞ்சுகளுமல்லவா உதிர்க்கப்படுகின்றன......!
பற்றில்லை என்று கூறி
பற்றை மட்டுமே விதைக்கிறாய்.....!
வளர்வது மரங்களல்ல...........
மனிதர்கள்..
சாயமேற்றப்படுவது போல்
நஞ்சு கலக்கப்படுகிறது நாணல்களில்....
வளைந்து மட்டுமா கொடுக்கிறது.
வளைத்தும் கொடுக்கிறது நஞ்சினை....
வாய்ப்புகளை விட வழுக்கல்களே
எங்கும் நிறைந்துள்ளன......
வழுக்கி எழுந்தாலும் கிடைப்பது
உண்மைகளல்ல வடுக்களே.....
இறைவா இப்போதாவது புரிகிறதா..
இல்லை இல்லை தெரிகிறதா..
உன் பகல் வே ஷம்.....
வே ஷம்கலைக்கும் தருணங்களை
தருவிக்கவே கைது செய்கிறேன்..
ஏன்
தெரியுமா.............?
குற்றம் செய்தவனைவிட
தூண்டுபவனே முதல் குற்றவாளி
அதனால் நீதான் முதல் குற்றவாளி....."
No comments:
Post a Comment