புத்தாண்டை வரவேற்று


பூத்துக்குலுங்கும் பூமியில்
புதியதாய் ஞனனம் பெற்றுள்ள
இளம்குழந்தைக்கு கள்ளிப்பாலை
விடுத்து உயிர்ப்பாலை
உண்மையாய் கொடு !

பசியில் வாடிவதங்கும்
ஏழையின் குழந்தைகளுக்கு
போதுமென உணவை
அன்பாக கொடு !

பள்ளி பருவத்தில்
கட்டணமில்லா கல்வியை
அனைவருக்கும் விவேகத்துடன் கொடு !

வாய்ப்புகளுக்காக வரம்
வேண்டிகிடக்கும் இந்திய இளம்
தூண்களுக்கு வாய்ப்புகளை
வள்ளலாக கொடு !

காமம் மட்டுமே
வாழ்க்கையின் லட்சியமாய்
கொண்டவர்களுக்கு காதலை
காணிக்கையாய் கொடு !

பருவ இளஞ்சிட்டுகளுக்கு
மனம் கவர்ந்த
மணவாளனை
மனதார கொடு !

முதிர்கண்ணிக்கு முடிந்துபோகா
வாழ்க்கையை
முந்தாணையாய் கொடு !

வட்டியை
வரதட்சணையாய் கேட்கும்
கல்நெஞ்சங்களுக்கு
திருப்பத்தை
தீர்ப்பாய் கொடு !

அன்பை மட்டும்
அரணாக கொண்டுள்ள ஏழையின்
நல் இல்வாழ்வுக்கு
வழியை உன்
விழிகளாய் கொடு !

பணமே வாழ்க்கையாய்
கொண்டுள்ள பணக்கார
நெஞ்சங்களுக்கு உறக்கத்தை௯ட
ஊதியமாய் கொடு !

கவலைகளை கனவுகளாக
கொண்ட உள்ளங்களுக்கு
இன்பத்தை
விலாசமாய் கொடு !

அனுபவத்தால் கனிந்த உள்ளங்களுக்கு
கவனிப்பை
கனிவோடு கொடு !

அணுகுண்டையும் ஏவுகணையையும்
விடுத்து செழுமையை
அன்பளிப்பாய் கொடு !

மொத்தத்தில் சமத்துவத்தையும்
சமாதானத்தையும் அன்புகலந்து
சாந்தமாய் கொடு...! கொடு......!

No comments: