ஓப்பனை

பூத்துக் குலுங்கும் பூக்கள் எனும் ஒப்பனை
பூமிதேவதையின் அழகை புத்தகமாய் விரிக்கிறது !

அலைகள் எனும் ஒப்பனை கடல் தேவதையின்
அழகை காதலாய் வெளிப்படுத்துகிறது !

தென்றல் எனும் ஒப்பனை அதனை பெற்றெடுக்கும்
மரங்களுக்கு அழகை தெம்மாங்காய் தருகிறது !

நிலா எனும் ஒப்பனை பரந்த வானத்திற்கும்
பூமிக்கும் அழகு சேர்க்கிறது !

தீபத்தின் சுடர் எனும் ஒப்பனை இருளை
அலங்கரித்து ஒளியாய் அழகுசேர்க்கிறது !

இயற்கையின் ஒப்பனைகள் அழகை
மேலும் செம்மைப்படுத்துகிறது !

ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம் எனும்
ஒப்பனை ஒற்றுமை எனும் தேவதையின்
அழகை குலைத்து வேற்றுமைகளால்
துன்பப்பட வைக்கிறது..! இது மட்டுமா.....?

பணமென்ற ஒப்பனையின் மறுவடிவமான
லஞ்சம் மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை
நேர்மை எனும் அழகுதேவதையை
மீட்கமுடியாத அடகுபொருளாய் வைத்து
அந்த தேவதையின் அழகை சிதைப்பதோடு

மனித வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது ..
இயற்கையின் ஒப்பனைகள் போதுமா ?
இல்லை செயற்கை எனும் ஒப்பனைகள்
அவசியமா...? சிந்திப்போம் ... "

No comments: