சிறகு உதிர்ந்த ஈசலைப்போல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உன்
மௌன மொழிகளால்....
மீண்டும் சிறகுகள் முளைக்கும்
உன் மௌனம் எனக்கு
சம்மதமாக அமையுமென்றால்..........!
தளத்திற்கு வருகை புரிந்த உங்களுக்கு நன்றி.. விமர்சனங்கள் அளித்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.
நான் பார்த்த ஒரு குழந்தை

எங்கே கற்றுக்கொண்டாய்
எங்களை மகிழ்விக்கும் மந்திரத்தை........
நீ பார்த்த ஒரு கணம்....
எனக்கு ஒரு யுகமாய் நினைவுகள்....
உன் மொழியை புரிந்து கொள்ள
நான் யாரிடம் பாடம் கற்க....?
உன்னிடமேவா......?
உன் விரல் தீண்டிய அந்த நொடி
நான் என்ன மோட்சம் பெற்றேனா......?
என்னுள் அப்படி ஒரு ஆனந்தம்......!
உன்னிடமிருக்கும் சந்தோசத்தை
விட்டுவிட்டு எங்கேயோ
தேடிக்கொண்டிருக்கிறோம்.............
அர்ப்பணிப்பு

என் நலம் வேண்டி கடவுளின் காலடியில்
நித்தம் தொழுபவள் நீ....!
உன் நலம் வேண்டி என்றாவது
ஒரு நாள் தொழுதிருப்பேன்...!
உனை பார்த்து கற்றுக்கொண்ட என்னால்
முடியவில்லை நித்தமும் தொழ
உனக்காக.....!
யாரையும் பார்த்து கற்றுக்கொள்ளாத
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது...?
நித்தமும்
எனக்காக தொழ...
இதனால்தானோ உன்னை
நடமாடும் தெய்வம் என்கிறார்கள்..
காரணங்களை நீ மட்டுமே அறிவாய்.....!
கண்ணீர்
கவிதை
வாழ்க்கையின் உயரங்களைத் தேடி
பூக்களின் சாலையில்
தவறி விழுந்து பெற்ற
வடுக்களின் வலிகள்
சொட்டிய குருதியின் சற்றே
வெளுத்து சிவந்த காயங்களோடு...
கதைகள் இல்லை...இல்லை...
கதைகளல்ல காவியங்கள்
கவிதைகளாய்........!
பூக்களின் சாலையில்
தவறி விழுந்து பெற்ற
வடுக்களின் வலிகள்
சொட்டிய குருதியின் சற்றே
வெளுத்து சிவந்த காயங்களோடு...
கதைகள் இல்லை...இல்லை...
கதைகளல்ல காவியங்கள்
கவிதைகளாய்........!
காலம்
வாசனையை நுகர
முயன்ற பொழுதுகளெல்லாம்
மொட்டுகளாய் மௌனம் சாதித்தாய்....!
வாசனையோடு பூத்துக் குலுங்கியபூது..
நுகர உரிமம் இல்லாதவனாய் நான்...!
முயன்ற பொழுதுகளெல்லாம்
மொட்டுகளாய் மௌனம் சாதித்தாய்....!
வாசனையோடு பூத்துக் குலுங்கியபூது..
நுகர உரிமம் இல்லாதவனாய் நான்...!
சில தருணங்கள்

நித்தம் நித்தம்
வந்துபோகிறாய்
நினைவுகளில்.........!
காரணங்கள் மட்டும்
புரியவில்லை......!
உன் வார்த்தைகளை புரிந்து
கொள்ள முடியாமல்
மதில்மேல் பூனையாய் நான்....!
ஆனாலும் என்னுள் ஒருபயம்
விட்டுவிட்டு எட்டிப்பார்க்கிறது
கடமைகளை
மறந்துவிடுவேனோ என்று...?
இந்தப் போராட்டங்கள்
உன்னுள்ளும்
நிகழ்கிறதா.....?
ஆம் என்றால் உன்
வார்த்தைகள் என்
வாழ்வின் ஒளிக்கீற்றுகள்...!
இல்லையெனில் அவை
இடரவைக்கும்
இருளின் பாதைகள்...!
என்னவளே உனக்கு
ஒரு வேண்டுகோள்....!
என்னைக்குழப்பும்
உன் சந்தோக்ஷத்தை
மட்டும் விட்டுவிடு
எனக்காக......!
ஏனெனில் நானிங்கு கலவரபூமியாய்
ஆனால் நீஅங்கு...........?
கருவறை
உன் நினைவுகள் என்னுள்
தோன்றும் பொழுதெல்லாம்..
எனக்கே தெரியாமல் என்
கவலைகளும் சோகமும் மறைந்து
சந்தோசம் ஒளிவீசத் தொடங்குகிறது...!
ஏன்..?
உன் நினைவுகளுக்கு
மட்டும் இப்படி ஒருசக்தி..!
காரணங்கள்
மட்டும் புரியவில்லை......!
இருந்தாலும்
ஒன்று மட்டும் புரிகிறது....!
உந்தன் கருவறையில் நானிருந்ததால்
உன் நினைவுகள் என்னை
சந்தோக்ஷப்படுத்துகிறது என்பது...!
தோன்றும் பொழுதெல்லாம்..
எனக்கே தெரியாமல் என்
கவலைகளும் சோகமும் மறைந்து
சந்தோசம் ஒளிவீசத் தொடங்குகிறது...!
ஏன்..?
உன் நினைவுகளுக்கு
மட்டும் இப்படி ஒருசக்தி..!
காரணங்கள்
மட்டும் புரியவில்லை......!
இருந்தாலும்
ஒன்று மட்டும் புரிகிறது....!
உந்தன் கருவறையில் நானிருந்ததால்
உன் நினைவுகள் என்னை
சந்தோக்ஷப்படுத்துகிறது என்பது...!
கஜினி திரைப்படத்தை பார்த்தபிறகு
பாசத்தில்
என் தாயாக.....!
அழகில்
நிலவும் பொறமைப்படும்படியாக...!
அவளது உலகம்
எனக்காக என்று எண்ணுபவளாகவும்.....!
எனது உலகமும்
அவளுக்காக என்று எண்ணவைப்பவளுமாக..!
எனக்காக எதையும் கொடுப்பவளாய்...
அவளுக்காகவே நான் பிறந்துள்ளேன்
என்று எண்ண்வைப்பவள்....
அவள் ஒருத்திக்காக காத்துகிடக்கிறேன்....!
அப்படி ஒருவளை எனக்காக
இறைவன் கொடுப்பான்
என்ற நம்பிக்கையில்......!
என் தாயாக.....!
அழகில்
நிலவும் பொறமைப்படும்படியாக...!
அவளது உலகம்
எனக்காக என்று எண்ணுபவளாகவும்.....!
எனது உலகமும்
அவளுக்காக என்று எண்ணவைப்பவளுமாக..!
எனக்காக எதையும் கொடுப்பவளாய்...
அவளுக்காகவே நான் பிறந்துள்ளேன்
என்று எண்ண்வைப்பவள்....
அவள் ஒருத்திக்காக காத்துகிடக்கிறேன்....!
அப்படி ஒருவளை எனக்காக
இறைவன் கொடுப்பான்
என்ற நம்பிக்கையில்......!
மழைக்கால நினைவுகள்

இறைவனின் குழந்தைகளாய்
பூமியை அடைபவளே...!
சில்லென்று வீசும் காற்றால்
அழைக்கழிக்கப்பட்டு ஜன்னலை
தீண்டும்போது நானும் உன்னை
தழுவினேன் உன்மீது
காதல் கொண்டு.....!
உன் இதமான தீண்டலில்
நான் பின்னோக்கி பயணித்தேன்...
அரைகால் டவுசருடன் புயலாய்
வீட்டில் நுழைந்தோம் இருவரும்..
ஏனெனில் என்வீடு உன்னையும்
வரவேற்க தயாராய் இருந்தது
வறுமையால் உடைந்துபோன கூரைகளாக..!
சந்தோசமாக வீட்டுக்குள்
நுழைந்த உன்னை வெறுக்கவே
செய்தாள் என் தாய்...!
பாழாய்ப்போன வீட்டிற்கு
எப்பொதுதான் விடிவோ...?
முணுமுணுப்போடு பாத்திரங்களை
வைக்கிறாள் நீநுழைந்த இடத்தில்..
அதில் கொஞ்சம்பங்கு எனக்கும்...!
உனது ஒய்யார ஆட்டம் நின்றபின்
உன்னை எடுத்துப் பார்த்து
போற்றுகிறாள் உன்
தூய்மையின் குணம் கண்டு..!
சந்தோசமாய் வந்தவள் சற்று
சிரமும் கொடுத்தாய்...ஆனால்
போகும்போது சந்தோசம்
மட்டுமல்ல உதவியும் செய்தாய்...!
சந்தோசம் எனக்கு உன்னை
கொண்டுவரும் வேலை இல்லை..
சந்தோசம் என் தாய்க்கு
அமிர்தமாகிய உன் சுவையால்..!
இந்த இன்பத்திற்காகவே வேண்டுகிறேன்
இறைவனை உந்தன் வருகயை
சற்று அதிகப்படுத்த.....!
விந்தையானவள் ( தாய் )
எனக்காகவே படைக்கப்பட்ட
இறைவனின் படைப்பு அவள்...!
அன்பை மட்டும் அள்ளித்தரும்
அட்சய பாத்திரம் அவள்...!
தரும் அன்பை திரும்ப
கேட்கவோ வாங்கவோ ஏன்
எதிர்பார்(க்க)ப்பதற்கு கூட தெரியாத
களங்கமற்ற தேவதை அவள்....!
நினைவுகள் மட்டுமல்ல..
சொட்டும் வியர்வை கூட என்
பெயர் சொல்லுமளவிற்கு நினைவுகள்
உந்தன் நெஞ்சில் ஆனால்.....
நானோ உன்னை மறந்து
காதல் என்ற பெயரில்
எவளோ ஒருத்தியின் நினைவுகளோடு..!
இறைவா எனை செதுக்கும்
தேவதையின் நினைவுகளை என்
குருதியில் கலப்பயாக....!
இறைவனின் படைப்பு அவள்...!
அன்பை மட்டும் அள்ளித்தரும்
அட்சய பாத்திரம் அவள்...!
தரும் அன்பை திரும்ப
கேட்கவோ வாங்கவோ ஏன்
எதிர்பார்(க்க)ப்பதற்கு கூட தெரியாத
களங்கமற்ற தேவதை அவள்....!
நினைவுகள் மட்டுமல்ல..
சொட்டும் வியர்வை கூட என்
பெயர் சொல்லுமளவிற்கு நினைவுகள்
உந்தன் நெஞ்சில் ஆனால்.....
நானோ உன்னை மறந்து
காதல் என்ற பெயரில்
எவளோ ஒருத்தியின் நினைவுகளோடு..!
இறைவா எனை செதுக்கும்
தேவதையின் நினைவுகளை என்
குருதியில் கலப்பயாக....!
பதிலில்லா கேள்விகள்
வாழ்க்கை எனும்
வட்டத்திற்குள்சிக்கி
ஓடுபவர்கள்தான் எத்தனைபேர்............?
நோக்கம் என்னவோ பணம்
என்ற ஒன்றை நோக்கியே...!
அனைவரும் ஓட்டத்தில்
வெற்றி பெற்றாலும்
வேறுபாடுகள் தோன்ற
காரணமானவர்கள் யார்.......?
வட்டத்திற்குள்சிக்கி
ஓடுபவர்கள்தான் எத்தனைபேர்............?
நோக்கம் என்னவோ பணம்
என்ற ஒன்றை நோக்கியே...!
அனைவரும் ஓட்டத்தில்
வெற்றி பெற்றாலும்
வேறுபாடுகள் தோன்ற
காரணமானவர்கள் யார்.......?
மென்பொருள் வல்லுநனின் நாட்கள்
மின்விசிறியின் சத்தங்களை கேட்டு
எழும் அதிகாலைப் பொழுதுகள்
தாயின் சத்தத்தை தேடும்காதுகள்.....!
தந்தையின் கண்டிப்பு இல்லாமல்
நகரும் நிமிடங்கள்......
நிற்க கூட நேரமில்லாமல்
ஓடும் மனிதர்களுக்கு நடுவே
நானும் சிக்கி ஓடி
நாளைத் தொலைத்து
திரும்புகிறேன் வெறுமையோடு...!
அப்போதாவது கேட்காதா....?
ஒருகுரல்.............
வெறுமையின் வெற்றிடத்தை
நிரப்பும் வார்த்தைகளோடு......!
எழும் அதிகாலைப் பொழுதுகள்
தாயின் சத்தத்தை தேடும்காதுகள்.....!
தந்தையின் கண்டிப்பு இல்லாமல்
நகரும் நிமிடங்கள்......
நிற்க கூட நேரமில்லாமல்
ஓடும் மனிதர்களுக்கு நடுவே
நானும் சிக்கி ஓடி
நாளைத் தொலைத்து
திரும்புகிறேன் வெறுமையோடு...!
அப்போதாவது கேட்காதா....?
ஒருகுரல்.............
வெறுமையின் வெற்றிடத்தை
நிரப்பும் வார்த்தைகளோடு......!
முத்தம்
அவளின் நினைவுகளால்
அவளின் முடிவை எண்ணி
உன் விழிகாணும் இரவுகளில்
சூரியனாய் ஒளிர்வேனா...? இல்லை
சந்திரனாய் மறைவேனா...?
முடிவு உந்தன் வார்த்தைகளில்....!
சூரியனாய் ஒளிர்வேனா...? இல்லை
சந்திரனாய் மறைவேனா...?
முடிவு உந்தன் வார்த்தைகளில்....!
சோம்பலும் சுறுசுறுப்பும்
விடியாத இரவில்
விடியும் பொழுதை
தேடினேன் கிடைத்தது..
விடிந்த பொழுதில்
விடியாத இரவை
தேடினேன் கிடைக்கவில்லை .....!
விடியும் பொழுதை
தேடினேன் கிடைத்தது..
விடிந்த பொழுதில்
விடியாத இரவை
தேடினேன் கிடைக்கவில்லை .....!
மனதின் சோம்பல்
சொப்பனத்தில் சுகம்
கண்டிடும் மனமே...
காலம் என்ற சோலையில்
புகுந்து தோல்விகள்
எனும் முட்களைஏற்றி
அனுபவம் என்ற
வடுக்களை பெற்று
வெற்றி எனும் சுகத்தை
காணமறுப்பதேனோ..?
கண்டிடும் மனமே...
காலம் என்ற சோலையில்
புகுந்து தோல்விகள்
எனும் முட்களைஏற்றி
அனுபவம் என்ற
வடுக்களை பெற்று
வெற்றி எனும் சுகத்தை
காணமறுப்பதேனோ..?
அவளின் மௌனம்
புத்தாண்டை வரவேற்று

பூத்துக்குலுங்கும் பூமியில்
புதியதாய் ஞனனம் பெற்றுள்ள
இளம்குழந்தைக்கு கள்ளிப்பாலை
விடுத்து உயிர்ப்பாலை
உண்மையாய் கொடு !
பசியில் வாடிவதங்கும்
ஏழையின் குழந்தைகளுக்கு
போதுமென உணவை
அன்பாக கொடு !
பள்ளி பருவத்தில்
கட்டணமில்லா கல்வியை
அனைவருக்கும் விவேகத்துடன் கொடு !
வாய்ப்புகளுக்காக வரம்
வேண்டிகிடக்கும் இந்திய இளம்
தூண்களுக்கு வாய்ப்புகளை
வள்ளலாக கொடு !
காமம் மட்டுமே
வாழ்க்கையின் லட்சியமாய்
கொண்டவர்களுக்கு காதலை
காணிக்கையாய் கொடு !
பருவ இளஞ்சிட்டுகளுக்கு
மனம் கவர்ந்த
மணவாளனை
மனதார கொடு !
முதிர்கண்ணிக்கு முடிந்துபோகா
வாழ்க்கையை
முந்தாணையாய் கொடு !
வட்டியை
வரதட்சணையாய் கேட்கும்
கல்நெஞ்சங்களுக்கு
திருப்பத்தை
தீர்ப்பாய் கொடு !
அன்பை மட்டும்
அரணாக கொண்டுள்ள ஏழையின்
நல் இல்வாழ்வுக்கு
வழியை உன்
விழிகளாய் கொடு !
பணமே வாழ்க்கையாய்
கொண்டுள்ள பணக்கார
நெஞ்சங்களுக்கு உறக்கத்தை௯ட
ஊதியமாய் கொடு !
கவலைகளை கனவுகளாக
கொண்ட உள்ளங்களுக்கு
இன்பத்தை
விலாசமாய் கொடு !
அனுபவத்தால் கனிந்த உள்ளங்களுக்கு
கவனிப்பை
கனிவோடு கொடு !
அணுகுண்டையும் ஏவுகணையையும்
விடுத்து செழுமையை
அன்பளிப்பாய் கொடு !
மொத்தத்தில் சமத்துவத்தையும்
சமாதானத்தையும் அன்புகலந்து
சாந்தமாய் கொடு...! கொடு......!
ஒவ்வொரு துளியிலும் நான் ( பணம் )

கருவறைக் கன்னிகளின் சுவாசம்
வாசமாய் மறைய
வைத்தவனும் நான்......!
சுயநலங்களின் சுருங்கிய
உள்ளத்திற்காக பிஞ்சுகளையும்
பொதி சுமக்க வைத்தவனும் நான்.....!
பருவத்து பெண்டிரை
பதுமைகளாக்கும் சூதாட்டத்தில்
பகைடையாய் நான்....!
காலத்தோடு இளமை கறைந்தும்
மாங்கல்யம் கிடைக்கச்
செய்யாமலிருக்க செய்தவனும் நான்....!
உண்மைகள்
ஊமையாய் போக
உயிர்மூலமும் நான்....!
இரவுகள் இருந்தும்
விடியலை விரட்டி
ஓட்டும் விதியும் நான்.....!
உரிமைகள் இருந்தும்
உறவுகள் மறைய இல்லை
உறவுகள் மறக்க அங்கு
இல்லாமல் போனவனும் நான்.....!
உயிர்கள் மறைந்தபின்
உறவை புதுப்பிக்க
அங்கே வாதாடுவதும் எனக்காக.....!
துளிகள் மட்டும் வெவ்வேறு
காலங்களில் ஆனால் ஒவ்வொரு
துளியிலும் மாறாமல் இருக்கும்
நான் யாரென்று உங்களுக்கும்
தெரிந்திருக்கும் உங்களுள் ஒருவன் .....!
பருவ ஈர்ப்பு
ஓப்பனை
பூத்துக் குலுங்கும் பூக்கள் எனும் ஒப்பனை
பூமிதேவதையின் அழகை புத்தகமாய் விரிக்கிறது !
அலைகள் எனும் ஒப்பனை கடல் தேவதையின்
அழகை காதலாய் வெளிப்படுத்துகிறது !
தென்றல் எனும் ஒப்பனை அதனை பெற்றெடுக்கும்
மரங்களுக்கு அழகை தெம்மாங்காய் தருகிறது !
நிலா எனும் ஒப்பனை பரந்த வானத்திற்கும்
பூமிக்கும் அழகு சேர்க்கிறது !
தீபத்தின் சுடர் எனும் ஒப்பனை இருளை
அலங்கரித்து ஒளியாய் அழகுசேர்க்கிறது !
இயற்கையின் ஒப்பனைகள் அழகை
மேலும் செம்மைப்படுத்துகிறது !
ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம் எனும்
ஒப்பனை ஒற்றுமை எனும் தேவதையின்
அழகை குலைத்து வேற்றுமைகளால்
துன்பப்பட வைக்கிறது..! இது மட்டுமா.....?
பணமென்ற ஒப்பனையின் மறுவடிவமான
லஞ்சம் மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை
நேர்மை எனும் அழகுதேவதையை
மீட்கமுடியாத அடகுபொருளாய் வைத்து
அந்த தேவதையின் அழகை சிதைப்பதோடு
மனித வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது ..
இயற்கையின் ஒப்பனைகள் போதுமா ?
இல்லை செயற்கை எனும் ஒப்பனைகள்
அவசியமா...? சிந்திப்போம் ... "
பூமிதேவதையின் அழகை புத்தகமாய் விரிக்கிறது !
அலைகள் எனும் ஒப்பனை கடல் தேவதையின்
அழகை காதலாய் வெளிப்படுத்துகிறது !
தென்றல் எனும் ஒப்பனை அதனை பெற்றெடுக்கும்
மரங்களுக்கு அழகை தெம்மாங்காய் தருகிறது !
நிலா எனும் ஒப்பனை பரந்த வானத்திற்கும்
பூமிக்கும் அழகு சேர்க்கிறது !
தீபத்தின் சுடர் எனும் ஒப்பனை இருளை
அலங்கரித்து ஒளியாய் அழகுசேர்க்கிறது !
இயற்கையின் ஒப்பனைகள் அழகை
மேலும் செம்மைப்படுத்துகிறது !
ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம் எனும்
ஒப்பனை ஒற்றுமை எனும் தேவதையின்
அழகை குலைத்து வேற்றுமைகளால்
துன்பப்பட வைக்கிறது..! இது மட்டுமா.....?
பணமென்ற ஒப்பனையின் மறுவடிவமான
லஞ்சம் மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை
நேர்மை எனும் அழகுதேவதையை
மீட்கமுடியாத அடகுபொருளாய் வைத்து
அந்த தேவதையின் அழகை சிதைப்பதோடு
மனித வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது ..
இயற்கையின் ஒப்பனைகள் போதுமா ?
இல்லை செயற்கை எனும் ஒப்பனைகள்
அவசியமா...? சிந்திப்போம் ... "
தொலைந்தது
மனதில் மவுனமாய்
சிறகடிப்பவளே....!
சஞ்சலத்தை மட்டும்
உண்டாக்குகிறாயே....?
உன் இதயமாளிகையில்
இடம்தேடி தொலைந்து போனது......?
என் இளமை
மட்டுமல்ல வயதும் தான்....!
சிறகடிப்பவளே....!
சஞ்சலத்தை மட்டும்
உண்டாக்குகிறாயே....?
உன் இதயமாளிகையில்
இடம்தேடி தொலைந்து போனது......?
என் இளமை
மட்டுமல்ல வயதும் தான்....!
புன்னகை
வானத்தின் புன்னகை
மழை.....
காற்றின் புன்னகை
தென்றல்.........
மலரின் புன்னகை
மனம்........
தோல்வியின் புன்னகை
வெற்றி மட்டுமல்ல.........
அனுபவ பாடங்களும்..............!
மழை.....
காற்றின் புன்னகை
தென்றல்.........
மலரின் புன்னகை
மனம்........
தோல்வியின் புன்னகை
வெற்றி மட்டுமல்ல.........
அனுபவ பாடங்களும்..............!
சிறகொடிந்த மனதில் மற்றொருவளின் நினைவுகள்
மலர்ந்த அவளின்
நினைவுகளால் மறுத்துபோன
என் மனதுக்குள்
சலனமின்றி
சத்த மிடுகிறது
உன் கொலுசின் ஓசை
சில்லை றையாய்
சிதறுகிறது
உன் சிரிப் பலை
ஏன் இந்த மாற்றம்...........?
குழப்பத்தில் குழம்புகிறேன்....!
நினைவுகளால் மறுத்துபோன
என் மனதுக்குள்
சலனமின்றி
சத்த மிடுகிறது
உன் கொலுசின் ஓசை
சில்லை றையாய்
சிதறுகிறது
உன் சிரிப் பலை
ஏன் இந்த மாற்றம்...........?
குழப்பத்தில் குழம்புகிறேன்....!
காதலியின் திருமணம் எண்ணி
மையலில் மதி மயங்கி
மனதில் மையம் கொண்டு
மஞ்சத்தில் உறவாட எண்ணி
சிறகின்றியும் பறந்த எனக்கு
தடயமின்றி வந்த கடிதத்தை
ஆவலாய் பிரித்த போதுதான்......?
புரிந்தது.......
அதுஎனக்கு சம்மதம்
தெரிவிக்கும்
சங்கீத வார்த்தை
ஞாலமல்ல
எனக்கு சமாதிகட்டும்
உனது
திருமண ஓலை.....!
காதல் வயப்பட்ட தோழியின் இதயத்தில் வழிந்தவைகளாய்
தனிமைகள்
போதிமரங்களாகும்
இருளிலும்
இடம் மாறதோன்றும்
நளினங்கள்
நடைபழக எண்ணும்
பாதரசத்துக்கு
உடனடி வேலைவாய்ப்பு
எழிலுக்கு
பதவி உயர்வு
நிமிடமுள் மட்டுமே உள்ள
காலக்கண்ணாடி
அவளின் கைகளில்....!
போதிமரங்களாகும்
இருளிலும்
இடம் மாறதோன்றும்
நளினங்கள்
நடைபழக எண்ணும்
பாதரசத்துக்கு
உடனடி வேலைவாய்ப்பு
எழிலுக்கு
பதவி உயர்வு
நிமிடமுள் மட்டுமே உள்ள
காலக்கண்ணாடி
அவளின் கைகளில்....!
வீணாய் போன நிமிடங்களை நினைத்து
கடந்துவந்த களிப்புகள்
ஒளியில்லா இருளின்
பாதையை காட்டும்
முன்னெச்சரிக்கைகளாக
இருந்திருக்க வேண்டு மென்று
இருள்நிறைந்த வழியில்
களிப்பாய் கிடைத்த
மின்னலின் ஒளியில்
நினைத்து அழுகிறேன்...
ஒளியில்லா இருளின்
பாதையை காட்டும்
முன்னெச்சரிக்கைகளாக
இருந்திருக்க வேண்டு மென்று
இருள்நிறைந்த வழியில்
களிப்பாய் கிடைத்த
மின்னலின் ஒளியில்
நினைத்து அழுகிறேன்...
அம்மா
அணுவைத் துளைத்து உலகத்தைக்கண்டவளே
உதிரங்கள் உதிர்ந்த போதும் உதிராமல் நீ
ஏனெனில் உனது உலகம் உதிராமலிருக்க...!
உதிரங்கள் உதிர்ந்த போதும் உதிராமல் நீ
ஏனெனில் உனது உலகம் உதிராமலிருக்க...!
விலைமாது
விளக்கணைக்க மட்டும் தேவைப்படுகிறேன்
விளக்கேற்றவும் தேவைப்படுவேன் என்ற
நம்பிக்கையால் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
விளக்கேற்றவும் தேவைப்படுவேன் என்ற
நம்பிக்கையால் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
எளிமை
நாகரீகமும் வறுமையும்
தொலைக்காட்சி
விதை(என்ற வார்த்தை கவிதையின் முடிவில்)
திரியை ஆண்பாலாக நினைத்து
இரவில் நட்சத்திரத்தை பார்த்தபோது
Subscribe to:
Posts (Atom)